செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (09:32 IST)

பயணிகள் குறைவாக இருந்தாலும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு..!

Metro Train
சென்னையில் கன மழை பெய்து வருவதன் காரணமாக, பலர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை மற்றும் சில அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால், மெட்ரோ ரயில் மிகவும் குறைவான பயணிகள் மட்டுமே பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியபோது, மெட்ரோ ரயில் சேவைகள் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், இன்று முழு அளவில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயிலில் நேற்றும் இன்றும் வழக்கத்தை விட பயணிகள் குறைவாக பயணம் செய்கின்றனர்; ஆனாலும், சேவை குறைக்கப்படாது என்றும், பயணிகள் குறைவாக இருந்தாலும், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எ

னவே, மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணிகள், இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சென்னையில் மின்சார ரயில்களும் நேற்று போலவே இன்றும் வழக்கம்போல இயங்கி வருகின்றன. சில இடங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால், மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva