இன்று அதீத கனமழை இருக்காது… தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்று நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று நள்ளிர்வில் இருந்து காலை வரை மிக அதிக கனமழை பெய்தது.
பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாகி குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் இன்று நேற்றளவு மழை இருக்காது என தமிழநாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளது ஆறுதலை அளித்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள ப்ரதீப் “மேகக் கூட்டங்கள் வடக்கு நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இன்று சில இடங்களில் கனமழை இருக்கலாம். ஆனால் அதீத கனமழை இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.