கோயம்பேடு-நேருபூங்கா மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் எப்போது?
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேட்டில் இருந்து சின்னமலை வரையிலான சேவை நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அடுத்தகட்டமாக, கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ பணிகள் முடியுந்தருவாயில் இருப்பதால் இந்த சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதைப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் நேரு பூங்கா முதல், கோயம்பேடு வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் பொது மேலாளர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், 8 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ள சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயில் சந்திப்பு நிலையமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில்களும் திறந்துவிட்ட பின்னர் சென்னையில் டிராபிக் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.