மெட்ரோ ரயில் புதிய இயக்க நேரம் அறிவிப்பு

சனி, 2 டிசம்பர் 2023 (20:05 IST)
ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், நாளை (03.12.2023) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

''ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ இரயில் சேவை நேரத்தில் மாற்றம் 
ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய மெட்ரோ இரயில் சேவைகள் அட்டவணையின் படி, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், நாளை (03.12.2023) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும்:
 
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
 
மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என்று தெரிவித்துள்ளது.
 

எல்லாம் காட்டு

கருணாநிதிக்கு பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்னா சீமானுடன் கொஞ்சுகிறார்கள்: திமுக குறித்து திருமாவளவன்..

சென்னை திரும்புகிறார் எவ வேலு.. நாளை லஞ்ச ஒழிப்புதுறை முன் ஆஜராவாரா?

முட்டாள் முதல்வரே!.. எல்லாமே பொய்!.. விஜயை திட்டிய ஆர்.ராசா

ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!.. அமெரிக்கா ஷாக்...

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.. உடனே ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய முதல்வர் விஜய்...

அடுத்த கட்டுரையில்
Show comments