வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (18:30 IST)

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

sea waves
குமரி கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த நிலையில் மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளிலும், வடக்கு அந்தமான் பகுதிகளிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் எனவே ஜூன் 16ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்தின் மற்ற கடலோர பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்றும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran