விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பு; இதற்கு பதில் சொல்வாரா ஹெச்.ராஜா?
விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் ஹெச்.ராஜாவுக்கு எப்படி கிடைத்தது என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக விஜய் பேசிய வசனத்திற்கு பாஜகவினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விஜய் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா டுவிட்டரில் ஜோசப் விஜய் என குறிப்பிட்டு வெளியிட்டார்.
இது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, ஹெச்.ராஜாவிடம் கேள்வி கேட்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் விதமாக பதிவிட்டுள்ளார். அதில்,
விஜய் ஐடி கார்டு உங்களுக்கு எப்படி கிடைத்தது என ஹெச்.ராஜாவை கேட்க விரும்புகிறேன். அதிகாரத்தில் இருப்பதால் பாஜகவால் அடுத்தவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவது எளிதானதா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த கேள்விக்கு ஹெச்.ராஜா பதில் சொல்வாரா என்று பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.