மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!
சென்னையில் நேற்று முதல்வர் கலந்து கொண்ட மருத்துவ கலந்தாய்வு கூட்டத்தில் சில மாணவர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு அட்மிசன் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்ற நிலையில் அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டதால் அவருக்கு ஒருமுறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.