1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (10:22 IST)

அடுத்து எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள்? ஊரடங்கு குறித்து நாளை ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை. 

 
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
 
இதன் பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை கட்டுப்பாடுகளுடன் நடத்துவது குறித்தும் நாளை ஆலோசிக்கப்பட உள்ளது.