இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் கலந்து செலுத்த அனுமதி! – மருந்து கட்டுப்பாட்டு இயக்குனநர்!
இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.