செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (14:10 IST)

விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய வைகோ!

விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய வைகோ!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியை அவரது தொண்டர்கள் ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.


 
 
விஜயகாந்தின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜயகாந்த் 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் விஜயகாந்துக்கு அவரது இல்லத்துக்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை கூறினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேறிய பின்னர் இருவரும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.