மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக!
கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இன்று மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது திமுக.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தற்போது திராவிட கட்சிகள் தொடர்ந்து தமது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றானர். திமுக தங்கள் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் என ஒதுக்கியுள்ளது.
ஆனால் திமுக ஒதுக்கும் இந்த கம்மியான தொகுதிகளால் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்நிலையில் தொகுதி ஒதுக்குதலில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று மீண்டும் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக ஆகியவை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.