செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (20:40 IST)

எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு கொரோனா பாதிப்பு. மருத்துவ மனையில் சிகிச்சை

எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தமிழகத்தில் தினமும் சராசரியாக 60 பேர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், காவல்துறையினர், மருத்துவர்களை, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அது குறித்த செய்திகளையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி எழுத்தாளரும் திமுக ஆதரவாளருமான மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரது வாசகர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது