திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (12:52 IST)

திடீர்னு தேர்தல் வரும்னு நினைக்கல.. தேர்தலில் போட்டியில்லை! – மன்சூர் அலிகான் வருத்தம்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் நடப்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கட்சி தொடங்கிய நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால் குறுகிய நேரத்தில் கட்சியை பதிவு செய்ய இயலவில்லை என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதனால் நடப்பு தேர்தலில் அவரது கட்சி போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.