நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!
காங்கிரஸ் கட்சியை வழிநடத்த, ராகுல் காந்திக்கு உதவ நான் தயாராக தான் இருக்கிறேன். ஆனால் அவர் தான் விரும்பவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மணிசங்கர், " இந்திரா காந்தி குடும்பத்துடன் எனது நட்பு தொடர்கிறது. அவர்கள் என்னை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி என்னை மிகவும் வயதானவர் என்று நினைக்கிறார்.
நான் விதிவிலக்கு; நான் வயதானவன் அல்ல. என்னை கட்சியில் விரும்பாததற்கும், என்னிடம் ஆலோசனை கேட்க விரும்பாததற்கும் வேறு காரணத்தை அவர் தேட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்னால் வழிகாட்ட முடியும். காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க ராகுல் காந்தி தயாராக இருந்தால், அதற்கு வழிகாட்டவும் நான் தயார். ஆனால், எனது வழிகாட்டலை அவர் விரும்பவில்லை. அவருக்கு என்னை பிடிக்கவில்லை.
என் கருத்தை அவர் மீது திணிக்க முடியாது. ராகுல் காந்தி என்னை நேரில் சந்தித்தால் அனைத்தையும் புரிந்து கொள்வார். ஆனால், அவர் என்னை சந்திக்க விரும்பவில்லை. நான் என்ன செய்ய முடியும்?" என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva