திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (12:46 IST)

ஆயிரம் கிடா வெட்டி அசத்தல் அன்னதானம்! – மணப்பாறையில் திருவிழா!

Mutton
மணப்பாறை அருகே முனியப்பசாமி கோவிலில் ஆயிரம் கிடா வெட்டி அன்னதான திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே உள்ள முனியப்பசாமி கோவில் நடைபெறும் “சகுனம் கேட்கும் திருவிழா” சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமாகும். இந்த திருவிழாவின் சிறப்பம்சமே இது ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தும் திருவிழா ஆகும்.

நேற்று நடைபெற்ற சகுனம் கேட்கும் திருவிழாவில் இரவு முதல் காலை வரை ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு முனியப்பசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. பின்னர் ஆடுகளை சமைத்து அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அசைவ விருந்தை ஒரு கை பார்த்தனர்.