திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (08:18 IST)

மூதாட்டியைத் தெருவில் தரதரவென இழுத்த இளைஞர் – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !

மூதாட்டியிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னையை அடுத்த கொளத்தூரில் தனியாக நின்று கொண்டிருந்த மூதாட்டியின் சங்கிலியைப் பறிப்பதற்காக இளைஞர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையை அடுத்த கொளத்தூரில் வீட்டு வேலைப் பார்க்கும் மூதாட்டி ஒருவர் பொருட்கள் வாங்க மளிகைக்கடை ஒன்றுக்கு வந்துள்ளார். பொருட்களை வாங்கிய அவர் கடை வாசலுக்கு சிறுது தூரத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பக்கம் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் அவரிடம் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் சங்கிலி வராததால், அந்த பாட்டியைக் கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்றுள்ளார். அதன் பின் சங்கிலியை அறுத்த அவர் தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். சிறிது தூரம் அவரைத் துரத்திச் சென்ற பொதுமக்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாக் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.