திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:39 IST)

தகராறு செய்த தம்பி… மாட்டிய அண்ணன் – வெட்டி கொலை செய்த கும்பல்!

சென்னை அருகெ தம்பியை கொலை செய்ய தேடியபோது அண்ணனை பார்த்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அம்பத்தூர் அருகே உள்ள குடிசை மாற்று வாரியத்தில் 4 மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்த போது பாலாஜியின் தம்பி சீனிவாசனுக்கும் கொலை செய்த கும்பலுக்கும் இடையே அரைமணி நேரத்துக்கு முன்னர்தான் ஒரு மோதல் நடந்ததாம்.

அந்த கும்பலைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வீட்டில் நடந்த நகைத்திருட்டு சம்மந்தமாக சீனிவாசனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த விரோதம் காரணமாகவே சதீஷ் தன் நண்பர்களுடன் சீனிவாசனை தேடிய போது பாலாஜி வந்த போது அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதையடுத்து தப்பிச் சென்ற நான்கு பேரையும் போலிஸார் தேடு வருகின்றனர்.