கொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை !

Updated: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:51 IST)
விருதுநகர் மாவட்டத்தில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் கௌதமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் கௌதமுக்கு ஆதரவாக சுந்தரமூர்த்தி செயல்பட்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரமூர்த்திக்கும் சுந்தரமூர்த்திக்கும் பகை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஊரில் உள்ள பொதுத் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் மீண்டுமொரு பிரச்ச்னை உருவாகி கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை ஈஸ்வரமூர்த்தியும் அவரது நண்பர்களும் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்துள்ள போலிஸார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

கப்பலை அட்டாக் பண்ணா ஈரான் பணத்தில் கை வைப்போம்!. டிரம்ப் வார்னிங்!..

நீட் பிரச்சனையை வைத்து மதக்கலவரத்தை தூண்டும் பதிவுகள்.. பாகிஸ்தானின் 480 சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்...

சமயபுரம், வடபழனி கோவில் நிர்வாகிகள் திடீர் சஸ்பெண்ட்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு...

அப்ப கர்ச்சீப் கட்டிட்டு வந்தாரு!.. இப்ப ஆளயே காணோம்!. விஜயை கலாய்த்த அமீர்!..

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments