செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (15:49 IST)

சாப்பாடு ருசியாக இல்லை… 77 வயது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை!

கடலூர் மாவட்டத்தில் உணவு ருசியாக சமைத்துத் தரவில்லை என முதியவர் ஒருவர் தனது மனைவியைத் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் தங்கவேல்(வயது 77) மற்றும் கலியம்மாள் (60). இந்நிலையில் கலியம்மாள் சமைக்கும் உணவு எப்போதும் ருசியாக இல்லை என்று கூறி தங்கவேல் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல சாப்பாடு நன்றாக இல்லை என சொல்லி திட்டியுள்ளார்.

பின்னர் மனைவியைக் குடிக்க தண்ணீர் எடுத்து வர சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அவர் தாமதமாக எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடும் கோபமடைந்த தங்கவேல், தனது மனைவி என்றும் பராமல் அவரை அடித்து தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை சுவரில் மோதி கலியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தங்கவேலைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.