திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (08:44 IST)

நண்பர்களின் கிண்டலால் தங்கையின் கணவனைக் கொன்ற இளைஞர் – திருநெல்வேலி பரபரப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கையின் கணவரைக் கொன்ற இளைஞரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மறுகால குறிச்சி பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த வான்மதியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வான்மதி செல்வந்தர் வீட்டுப் பெண் என்பதால் அவர்கள் வீட்டில் இந்த காதலுக்கு  எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலி டவுனில் வாடகை வீடு எடுத்துக்கொண்டு நம்பிராஜனின் தந்தையோடு வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் நம்பிராஜனைப் பார்க்க அவருடைய நண்பரான முத்துப்பாண்டி என்பவர் வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் நண்பரைப் பார்த்த  நம்பிராஜன் மகிழ்ச்சியில் அவரோடு சேர்ந்து மது அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெளியே சென்ற நம்பிராஜன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் வான்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  நம்பிராஜனின் தலை அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கிடைத்ததை அடுத்து முத்துப்பாண்டியையும் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியையும் போலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துப்பாண்டி அழைத்துச் சென்ற இடத்தில் மறைந்திருந்த வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி நம்பிராஜனை வெட்டிக் கொலை செய்து அவரது தலையை தலையை தண்டவாளத்தில் போட்டதாக ஒத்துக்கொண்டுள்ளார்.  கொலைக்கான காரணம் குறித்து  சொன்ன செல்லப்பாண்டி ‘தனது நண்பர்கள் அவரது தங்கை திருமணத்தைப் பற்றி கேலி செய்ததால்’ இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.