பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை – தீர்ப்பைக் கேட்டு மயக்கம்!
போக்ஸோ நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு தந்தை நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் என்பவர் மீது அவரது மனைவி 2015 ஆம் ஆண்டு பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஐந்து வருடமாக நடந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டது. அதில் ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் கேட்ட ஜேம்ஸ் கதறி அழுது நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.