Daily Horoscope
✕

மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை – கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான 3 குழந்தைகள்!

Updated: புதன், 14 அக்டோபர் 2020 (15:45 IST)
சென்னையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் கணவனும் அதே முடிவை எடுத்துள்ளார்.

சென்னையக்கு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் தியாகராஜன் மற்றும் சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளன. சத்யா சில ஆண்டுகளாக நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால்  கடந்த 11 ஆம் தேதியன்று, அவர் வீட்டு சமையலறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது கணவரும் சத்யா இறந்த அதே இடத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அவர்களின் மூன்று குழந்தைகளும் இப்போது அனாதையாகியுள்ளனர். இது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

திமுக ஆட்சியை விட துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைவு.. அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு..

தவெக ஆட்சியில் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அறிவிப்பு.. நாளை வெளியாகிறது...

காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை...

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்.. எதிர்த்து வழக்கு.. இன்று விசாரணை.. தடை விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments