மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி விலகல்.. பாஜகவில் இணைகிறாரா?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அனுஷா ரவி என்பவர் திடீரென கட்சியில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் அண்ணாமலை முன்னிலையில் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில்முக்கிய பொறுப்பாளராக இருந்த டாக்டர் அனுஷா ரவி என்பவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அன்புக்குரிய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மையம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பதமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி
இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புகளை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிக மிக சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுகளை பெற்றதில் மகிழ்ச்சி. இருப்பினும் தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் அனுஷா ரவி விரைவில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran