ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 நவம்பர் 2024 (10:28 IST)

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.. என்ன காரணம்?

Electric Train
சென்னை எழும்பூர்-விழுப்புரம் பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை மதியம் 1.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை  பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால் சில மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பகலில்சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை காலை 11.40, மதியம் 12.20, 12.40, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. 
 
செங்கல்பட்டில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை மதியம் 1.45, 2.20 மாலை 3.05, 4.05, 4.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
 
.இதேபோல, சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரையில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலும், செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 
 
 
 
Edited by Siva