Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்

Updated: திங்கள், 1 ஜூன் 2020 (08:00 IST)
மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்
நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் குடும்பமே இன்று பாஜகவில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேற்று பிரதமர் மோடி அவர்கள் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும் சலூன் கடைக்காரர் தனது மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த ரூ.5 லட்ச ரூபாயை ஏழைகளுக்கு உதவி செய்தது குறித்து குறிப்பிட்டு அதற்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் 
 
இதனையடுத்து நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சலூன் கடைக்காரரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று சலூன் கடைக்காரர் மோகன் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைவதாக கூறியதை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் மோகனின் மகள் உள்பட அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பாஜகவில் இணைந்தனர் பாஜகவில் இணைந்த மோகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி பாஜகவினர் வரவேற்றனர்
 
நேற்று பிரதமரால் பாராட்டப்பட்ட ஒருவர் தனது குடும்பத்துடன் இன்று பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எல்லாம் காட்டு

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..

மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசா கார்டு.. ஒரே இரவில் 2600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி..

தமிழக பட்ஜெட் 2026-27.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி.. முழு விவரங்கள்...!

மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் ஆடு, மாடுகள் வளர்ப்பு திட்டம்.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..

கல்வித்துறைக்கு வாரி வழங்கிய தவெக அரசு.. ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு

அடுத்த கட்டுரையில்
Show comments