திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:46 IST)

சினிமாவுக்கு சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த போலீஸ்! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணை போலீஸே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இளம்பெண் தனது சக கடை ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளருடன் செல்லூரில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு படம் பார்க்க சென்றுள்ளார்.

படம் முடிந்து இரவு 1 மணியளவில் இளம்பெண்ணை அவரது வீட்டில் விடுவதற்காக கடை உரிமையாளர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது வழிமறித்த போலீஸார் அவர்களை விசாரித்துள்ளனர். பின்னர் அந்த போலீஸ், இளம்பெண்ணை தான் பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடன் ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவரும் பெண்ணை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காவலர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.