ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:23 IST)

மதுரையில் களைக்கட்டிய பூ வியாபாரம்; பூ சந்தையை மூடிய மாவட்ட ஆட்சியர்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மதுரை பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது.

பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பலர் பூ வாங்க மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் அதிகமாக குவிந்ததால் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.