வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மே 2022 (13:05 IST)

இனி பறந்து வரும் கூரியர்! மதுரையில் ட்ரோன் மூலம் கூரியர் சர்வீஸ்!

மதுரையில் முதன்முறையாக கூரியர்களை எடுத்து செல்ல ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சியில் தனியார் நிறுவன இறங்கியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் பல துறைகளிலும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ராணுவம் தொடங்கி தீயணைப்பு துறை, நில அளவை உள்ளிட்ட பணிகளுக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக பிரபல உணவு நிறுவனங்கள் கூட உணவு பொருட்களை ட்ரோன்கள் மூலமாக டெலிவரி செய்வது குறித்து பரீட்சார்ந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனம் கூரியர் கொண்டு செல்ல ட்ரோனை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக மதுரை தலைமை கூரியர் ஆபிஸில் இருந்து கிளை அலுவலகத்திற்கு தனது ட்ரோன் சர்வீஸை தொடங்கியுள்ளது. இந்த ட்ரோன் 40 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 45 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் என கூறப்படுகிறது.