பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அரசியல் தலைவர்கள் யாரும் அறிக்கை விட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காய்ச்சல் அதிகமாகி வருவதை அடுத்து அண்டை மாநிலமான புதுவையில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தமிழகத்திலும் அதேபோல் விடுமுறை அளிக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் அறிவித்து வருகிறார்கள் என்றும் இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றும் எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்