தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்… ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று சமத்துவபுரம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் அது பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாகவும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.