Daily Horoscope
✕

இன்று பகுதி சந்திர கிரகணம்: கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்!

Written By Prasanth Karthick
Updated: சனி, 28 அக்டோபர் 2023 (12:36 IST)
இன்று இந்த இரவு இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் தொடங்கும் நிலையில் கோவில்களில் வழிபாட்டு நேரம் மாற்றப்பட்டுள்ளது.



இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை நள்ளிரவின் 3 மணி வரை தொடர உள்ளது. பொதுவாக கிரகண சமயத்தில் கோவில் நடைகள் சாத்தப்படும் என்பதால் கோவில் வழிபாட்டு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் இன்று இரவு 7.05 மணி முதல் 29ம் தேதி அதிகாலை 3.15 வரை நடை சாத்தப்படுகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 5 மணி சாயரட்சை பூஜை முடிந்ததும் நடை மூடப்பட்டு நாளை காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
பழனி முருகன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கும், திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கும் நடை மூடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோபிலில் இன்று மாலை 5.30 மணிக்கே நடை மூடப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்குதான் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

பிரகாஷ்ராஜ் திரையில் எப்படி வில்லனோ, அதேபோல் நிஜவாழ்க்கையிலும் வில்லன்: நயினார் நாகேந்திரன்..

தனுஷின் அரசியல் கட்சியின் பெயர் தமிழக எழுச்சி கழகம்? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments