இன்று சந்திர கிரகணம்: திருப்பதி போல தமிழகத்திலும் கோவில் நடை மூடல்!
தமிழகத்தில் பல கோயில்களில் இன்று நடை அடைக்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி நேர்க்கோட்டில் பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சமய நம்பிக்கையில் இது நிலவை பாம்பு விழுங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் (ஐப்பசி 22) ஆம் தேதியான் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.39 மணியளவில் தொடங்கி மாலை 6.29 மணிக்கு முடிவடையும். இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இந்த சந்திர கிரகணத்தை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். அதாவது 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது. இதே போல தமிழகத்தில் பல கோயில்களில் இன்று நடை அடைக்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
# திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் காலை 10.45 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 6.15 மணிக்கு திறக்கப்படும்.
# வடபழனி முருகன் கோயில் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
# தி.நகர் திருமலை தேவஸ்தானம் இரவு 7.20 மணிக்கு திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும்.
# திருச்சி ரங்கநாதர் கோயில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
# திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயிலில் பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.
# சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும்.
# மேல்மலையனூ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நாளை மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடை மூடப்படும்.
# மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படும்.
# வேலூர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் நடை அடைக்கப்படும்.
Edited By: Sugapriya Prakash