முதியவரை கட்டிப்போட்டு திருடிய காதலர்கள்
கோவை மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொம்மணம்பாளையம் பகுதியில் பெரிய ராயப்பன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வீட்டில் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில்ல், நேற்று காலையில், ராஜம்மாள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அன்று மதியம் பைக்கில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் பெரிய ராயப்பபனிடம் குடிக்க நீர் கேட்டனர். அவர் நீர் எடுத்து வருவதற்குள் வீட்டிற்குள் புகுந்த இருவரும் அவரைக் கட்டிப்போட்டு, அங்கு பீரோவில் இருந்த லாக்கரை உடைத்து நகைகளை திருடினர்.
அப்போது, பெரிய ராயப்பனின் மகனும் மருமகளும் வீட்டிற்கு வரும்போது, திருடிச் சென்ற காதலர்களைப் பிடிக்கும்படி பொதுமக்களிடம் கூறவே அவர்களைப் பித்த மக்கள், போலீஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர், அதில், தினேஷ்குமார்(23), செணபகவல்லி(24) இருவரும் பட்டதாரிகள் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.