வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (11:04 IST)

காதலர் தினம் வேண்டாம்: இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு காதலர் தினம் தேவையில்லை ஹேஷ்டேக்  இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே ஒரு சில அமைப்புகள் காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து வரும் நிலையில் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை எல்லா நாளும் காதலர் தினமே என்றும் என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
 
காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஹேஷ்டேக் கில் பல்வேறு இந்தியர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதால் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக்  டிரண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காதலர் தினம் என்பது அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு தினமாகவே இளைஞர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.