ராஜூமுருகன் டிவி தொகுப்பாளினியுடன் காதலில் விழுந்த கதை!
குக்கூ, ஜோக்கர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ராஜு முருகன், பிரபல டிவி தொகுப்பாளினி ஹேமா சின்ஹாவை நேற்று திருமணம் செய்துக்கொண்டார்.
ராஜூ முருகன் திருவாரூரைச் சேர்ந்தவர், ஹேமா சின்ஹா மதுரையைச் சேர்ந்தவர், ராஜூ முருகன், விகடன் நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிகொண்டு இருந்த போது, ஹேமா சின்ஹா சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும், அவர் சில தனியார் நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக சென்றுவந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இதழ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக இருந்தார். அப்போது, அந்நிகழ்ச்சிக்கு வரும் ராஜூ முருகனுக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், திடீரென்று சில காரணங்களால் ஹேமா வேறொருவரை மணம் முடித்து, நெதர்லாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால், அந்த மணவாழ்க்கை அவருக்கு தோல்வில் முடிந்தது. அதேசமயம் ராஜு முருகனுடன் பழைய காதல் தொடர்ந்தது. முறையான விவாகரத்துக்காக பொறுத்திருந்த ஹேமா சின்ஹா, விவாகரத்து கிடைத்த உடன் ராஜூமுருகனை திருமணம் செய்துக்கொள்ள நினைத்தார். இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜூமுருகனும், ஹேமா சின்காவும் ரகசியமாக திருமணம் செய்யதுக்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று, சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, திடீரென்று பெசன்ட் நகர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை இயக்குனர் பாலா, லிங்குசாமி ஆகியோர் நடத்தி வைத்தனர். மனுஷ்யபுத்திரன் உள்பட சில எழுத்தாளர்களும், ராஜூமூருகனின் நண்பர்கள் சிலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.