காதலித்து திருமணம் செய்த ஜோடி, தூக்கில் தொங்கி தற்கொலை: கடலூரில் பரபரப்பு
காதலித்து திருமணம் செய்த ஜோடி, தூக்கில் தொங்கி தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்ற பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகேஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் ஒழுங்காக இருந்த மணிகண்டன் திடீரென மதுபோதைக்கு அடிமையானார். தினமும் குடித்துவிட்டு போதையில் தள்ளாடி வந்ததை பார்த்த மகேஸ்வரி அதிர்ச்சி அடைந்து அவரை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் திருந்துவதாக தெரியவில்லை
இதனை அடுத்து நேற்றும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மகேஸ்வரியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த மகேஸ்வரி தனது குடிகார கணவரை திருத்த முடியவில்லை என்ற விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மனைவி தற்கொலை செய்து கொண்டதை கூட அறியாமல் போதையில் இருந்த கணவன் மணிகண்டன், காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன்னால்தான் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்ததும் அவரும் தூக்கில் தொங்கிவிட்டார்.
காலையில் நீண்டநேரம் வீட்டின் கதவு திறக்காததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. குடிபோதை ஒரு காதல் ஜோடியை பலிவாங்கி விட்டதை அறிந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்