1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (15:02 IST)

விதவையாக வாழ விருப்பமில்லை…. விவாகரத்து வேண்டும் – நிர்பயா குற்றவாளியின் மனைவி வழக்கு !

அக்‌ஷய் குமார் சிங் மற்றும் மனைவி புனிதா

நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேருக்கு நாளை மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் குற்றவாளிகளில் ஒருவரின் மனைவி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை 5 பேர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தற்போது உயிரோடு இருக்கும் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தூக்கு தண்டனை கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது 

குற்றவாளிகளில் ஒருவராக மாறி மாறி நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்தும் வருவதால் அந்த மனுக்களின் விசாரணைகள் முடியும் வரை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தர விட்டது 

எனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை மார்ச் 20 ஆம் தேதி தூக்கில் போடுவது உறுதி என்று சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா என்ற குறித்த சந்தேகம் இன்னொருபக்கம் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா என்பவர் தான் விதவையாக வாழ விரும்பவில்லை என்றும் அதனால் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்க உள்ளது. இந்நிலையில் தூக்கு தண்டனையை தள்ளி வைப்பதற்காகவே இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.