1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2023 (21:05 IST)

ஆண்டிற்கு ரூ.28.16 கோடி இழப்பு:ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை

omni bus
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி  பேருந்துகள் டிசம்பர் 16 க்குப் பின் தமிழ் நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
 

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் விதிகளை மீறி வெளி மாநில பதிவேடு கொண்டதாக இயங்கி வருகிறது.

இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் 652 பேருந்துகளால் ஆண்டிற்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுவதாக தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன் பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும்  நீடித்து வரும் நிலையில், இன்று தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு எச்சரித்துள்ளது.

அதன்படி, வெளி மாநிலத்தில் பதிவு செய்யபப்ட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16 ஆம் தேதிக்குப் பின் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.