டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி இருந்ததா? அதிர்ச்சி தகவல்..!
டாஸ்மாக் மது கடையில் வாங்கிய மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் தெரிவித்தது விருத்தாச்சலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாச்சலத்தை சேர்ந்த ராம்கி என்பவர் 130 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டிலை வாங்கிய நிலையில் அந்த பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவருக்கும் கடை விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இறுதியில் பல்லி இருந்த மது பாட்டிலை திரும்ப பெற்றுக் கொண்டு வேறு பாட்டில் தருமாறு ராம்கி கூறியதாகவும் ஆனால் கடைக்காரர் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பல்லி இறந்த மது பாட்டிலில் உள்ள மதுவை தான் கொடுத்திருந்தால் தனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் என்றும் பத்து ரூபாய் விலை அதிகமாக விற்பது மட்டுமின்றி பல்லி இறந்த கிடந்த மதுபாட்டிலை விற்பனை செய்வதா? என்று கடைக்காரர் ராம்கி வாக்குவாதம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran