செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (18:50 IST)

2022-ஆம் ஆண்டு IMDB படங்களில் பட்டியல்: ''விக்ரம் ''படம் 4 வது இடம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய சினிமாவில் பாலிவுட்டுக்கு நிகர் பாலிவுட் தான் என்ற  நிலை இருந்தது.

ஆனால், பாகுபலி படத்திற்குப் பின், உலகளவில் தென்னிந்திய சினிமாவின் மீதான ரசிகர்களின் கவனம்குவிந்து, படங்களுக்கும் ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் படங்களில் சில தோல்வியடைந்த இந்த ஆண்டில், தென்னிந்திய படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இந்த  நிலையில், IMDB பட்டியலில் வெளியான 2022-ல் டாப் 10 படங்களில்  8 இடங்களை தென்னிந்திய படங்கள் பெற்றுள்ளது.

 இதில்,

முதலிடத்தில் ஆர் ஆர் ஆர் படமும், 2 வது இடத்தில் கேஜிஎஃப் படமும், 4 வது இடத்தில் விக்ரம் படமும், 9 வது இடத்தில் பொன்னியின் செல்வன் படமும் பெற்றுள்ளது.

பாலிவுட்டில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற படமும் மேஜர் படமும் இடம்பிடித்துள்ளது.

Edited By Sinoj