1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (17:56 IST)

''விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா''! - ராஜ்கமல் பிலிம்ஸ் முக்கிய அறிவிப்பு

kamalhasan
''விக்ரம்'' படத்தின் 100 நாள் வெற்றியை வெகுவிமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. எனவே வரும்  நவம்பர் 7 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் இவ்விழா நடக்கும் என ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படத்தை இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா, நரேன், ஆகிய பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்ததிருந்தார்.  இப்படம் மிகப்பெரிய வசூல்சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை தமிழ் சினிமா செய்யாத வசூல் சாதனை படைத்தது.

 இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூலித்த படம் என்ற சாதனை படைத்துள்ள நிலையில், இப்படம் ரூ.500 கோடி என்ற சாதனையை நெருங்கியுள்ளது.

இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்களில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு அடுத்து  விக்ரம் 2 இடம்  பிடித்துள்ளது.

இந்த நிலையில்,   நடிகர் கமலின் ராஜ்கமல் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றியை வெகுவிமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. எனவே வரும்  நவம்பர் 7 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் இவ்விழா நடக்கும், இதை  கமல் மற்றும் மகேந்திரனும்  ஒருங்கிணைந்து  நடத்தவுள்ளதாகவும், இதில், விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
Edited by Sinoj