புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (19:48 IST)

தமிழக இளைஞர்களை திரட்டி போராடுவோம் ! அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க உரிய சட்டத்திருத்தம் வேண்டும் எனவும் தமிழக அரசை , திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்  என தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! என தெரிவித்துள்ளார்.