1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:01 IST)

குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்!- முதல்வர்

Stalin
சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினேன். இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன''என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன. அதனைக் குறைக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினேன்.

இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி! சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்!'' என்று தெரிவித்துள்ளார்.