1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (14:07 IST)

சினிமா வாழ்வில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியது கிடையாது- குஷ்பு

'என்னை பொருத்தவரை அனைவரும் சமம். தகாத வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமவின் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் எக்ஸ் பக்கத்தில் அவரிடம் கேள்வி  கேட்டு பதிவிட்டிருந்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்த குஷ்பு திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று தெரிவித்தார். பின்னர்  சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள் என்றும் அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 'என்னை பொருத்தவரை அனைவரும் சமம். தகாத வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை. யாரையும் தவறாகப் பேசவில்லை. இத்தனை வருட சினிமா வாழ்வில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியதில்லை. நான் ஊரில் இல்லாத நேரத்தில் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்த தமிழக அரசுக்கு எனது மிகுந்த நன்றியை கூறிக் கொள்கிறேன்'. என்று தெரிவித்துள்ளார்.