செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (15:25 IST)

சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தத் தொற்பும் இல்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக இணைப்பதாகக் கூறி அதிமுக  கொடியைப் பயன்படுத்தினார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கூறிவருவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சசிகலா பேசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.