1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (13:13 IST)

நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் கழகமும் நன்றாக இருக்கும்: சசிகலா

நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் கழகமும் நன்றாக இருக்கும் என்றும் நாம் தனித்தனியாக பிரிந்து இருப்பதால்தான் எதிரிகளுக்கு அது வெற்றியாக மாறிவிட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா 
 
அதிமுகவின் 50வது பொன்விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா.  அப்போது நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் என்றும், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகிய இருவரும் கட்டிக்காத்த இந்த கட்சியை நாம் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
 
நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் நான் சென்றேன் என்றும் கூறிய சசிகலா, ‘மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் என்றும் கூறினார்.
 
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட்டபோது ஜானகி அம்மாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது என்றும் அதனால் அதிமுக ஒன்றானது என்றும் , அதேபோல் இன்றும் நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவின் அழைப்பை ஓபிஎஸ் இபிஎஸ் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்