திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (08:22 IST)

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் LLB என்ற படிப்புக்கு விண்ணப்பிக்கும் முக்கிய தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது சட்டப்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்திரு சட்டப் பள்ளி ஆகியவற்றில் LLB, 3 ஆண்டு சட்ட படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இந்த தகவலை அறிவித்துள்ளதை அடுத்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva