’நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்’ என அமைச்சர் பேச்சு. அமைதியான போராளிகள்
அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனில் நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அவர்கள் கூறியதை அடுத்து கடந்த ஆட்சியில் போராட்டம் செய்த போராளிகள் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
எட்டு வழி சாலை தமிழகத்தில் போடுவதற்காக கடந்த அதிமுக அரசு திட்டமிட்டபோது தற்போதைய முதல்வர் உள்பட பல எதிர்க்கட்சிகள் ஆளும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பல திடீர் போராளிகள் அப்போது எதிர்த்து குரல் கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது அதே எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என்றும் சாலைகளை மக்களுக்காகத்தான் போடுகிறோம் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்துள்ள போதும் அனைத்து போராளிகளும் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஆட்சியில் பொங்கிய நடிகர்களும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Edited by Siva