தமிழக பாஜக தலைவர் நியமனம்: யார் தெரியுமா?
தமிழக பாஜக தலைவர் நியமனம்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது
இந்த பதவியை பிடிக்க ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எஸ்வி சேகர் உள்பட பலர் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென தற்போது தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அவர்கள் சற்று முன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து முருகன் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது
எல் முருகன் அவர்களுடன் இணைந்து தமிழகத்தில் பணியாற்ற தயார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒரு சிலர் பாஜக பிரமுகர்கள் தலைவர் பதவி தங்களுக்குக் கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எல். முருகன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்