புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (13:12 IST)

ச்சு.. ச்சு..ச்சு.. என்ன நடிப்பு டா சாமி... மோடிக்கு ஆஸ்கர்: குஷ்பு கமெண்ட்!!

குஷ்பு, மோடியின் டிவிட்டை கண்டு பிரதமர் ஆஸ்கருக்கு போட்டியிடலாம் என தெரிவித்துள்ளார்.  
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர்.
 
சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்கள் கொண்ட பிரபலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேற யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, மோடியின் டிவிட்டை கண்டு பிரதமர் ஆஸ்கருக்கு போட்டியிடலாம், என்னை நம்புங்கள் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என கமெண்ட் செய்துள்ளார். 
 
இதேபோல ராகுல் காந்தி, சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக, வெறுப்பைக் கைவிடுங்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.